தாம்பரம் மாநகர காவல் துறைக்கு ரவுடிகள் ரெயிலில் பணம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரெயில் குளிர்சாதன பெட்டியில் சென்ற நபர்களை கண்காணித்தனர்.
இதனையடுத்து ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்றபோது போலீசார் அந்த பெட்டியில் ஏறிசென்று புரசைவாக்கம் ப்ளு டைமண்ட் எனும் தனியார் விடுதி மேனேஜர் சதிஷ்(33), அவரின் தம்பி நவீன்(31), ஹோட்டல் காய்கறி லாரி ஓட்டுனர் பெருமாள் உள்ளிட்ட மூன்று பேர் பிடிபட்டனர், அவர்களின் பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய்தாள்கள் பணம் இருந்ததால் போலீசார், தாம்பரம் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அவர்களும் அங்குவந்த நிலையில் பிடிபட்ட மூன்றுபேர், ஆவணம் இல்லா பணத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு தாம்பரம் காவல் இணை ஆணையாளர் மகேஸ்வரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாசில்தார் நடராஜன், செந்தில் பாலமணி எனும் பெண் அதிகாரி ஆகியோர் எண்ணிப்பார்த்ததில் 3 கோடியே .99 லட்சம் ரூபாய் பணம் இருந்தது.
இதனை திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளரும், தங்கள் பணிபுரியும் விடுதியின் உரிமையாளர் நயினார் நாகேந்திரனுகாக கொண்டு சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து முறையாக பதிவு செய்த நிலையில் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.