பாகுபலி 1 மற்றும் 2 படங்களுக்கு பிறகு, ராஜமௌலி இயக்கி திரைப்படம் RRR. ரத்தம் ரணம் ரௌத்திரம் என்று தமிழில் பெயரிடப்பட்டு வெளியான இந்த திரைப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதுமட்டுமின்றி, இந்த படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல், ஆஸ்கர் விருதும் பெற்று, உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்றது.
இந்நிலையில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரே ஸ்டீவன்சன், நேற்று இத்தாலி நாட்டில் காலமானார். இந்த தகவலை அறிந்த இயக்குநர் ராஜமௌலி, அவரது மறைவுக்கு, இரங்கல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி.. ரே ஸ்டீவன்சன் நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள்.. எங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்” என்று கூறியிருந்தார்.
RRR படத்தில் நடித்திருந்த நடிகர் ரே ஸ்டீவன்சன், ஹாலிவுட் சினிமாவில், பல்வேறு படங்களில் நடித்திருந்தவர் என்பதும், அவர் நடித்திருந்த படங்களில் ஒன்று தான் Thor என்பதும், குறிப்பிடத்தக்கது.