ஒடிசா மாநிலம் கியாஞ்சர் மாவட்டத்தின் அருகே அமந்துள்ளது ஷிலிபாடா காடுகள். இலுப்பை பூக்களை ஊறல் போட்டு நாட்டுச்சாராயம் காசுவது அப்பகுதி மக்களின் வழக்கம். அந்த வகையில் கடந்த செவ்வாய் அன்று வழக்கம் போல் காய்ச்சி வைத்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக சென்ற சுமார் 24-யானைகள், பெரிய பானைகளில் காய்ச்சி வைத்திருந்த நாட்டு சாராயணத்தை ஒரு சொட்டுக் கூட விடாமல் மட்டையாகிவிட்டன. அடுத்த நாள் வந்து பார்த்த கிராம மக்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த யானைகளை மேளங்களை இசைத்து எழுப்பி விரட்டியுள்ளனர்.