மதுரை ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் பகுதியை சோ்ந்தவா் மூதாட்டி ஆயி என்கிற பூரணம்.இவா் அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறாா்.இவரது கணவன் உக்கிரப்பாண்டியன் மற்றும் இவரது மகள் ஜனனி ஆகியோா் சிறிது ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தனா்.
இதைத்தொடர்ந்து , இவருக்கு மதுரை கொடிக்குளம் பகுதியில் சொந்தமாக 4 கோடி மதிப்பில் , 1.52 ஏக்கா் நிலம் உள்ளது. இவா் இந்த நிலத்தை தனது கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியை , உயா்நிலைப்பள்ளியாக உயா்த்துவதற்காக தானமாக வழங்கியுள்ளாா்.
இதனை மாவட்டக்கல்வி அலுவலா் சுப்புராஜ் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் காா்த்திகா , வட்டாரக் கல்வி அலுவலா் இந்துராணி ஆகியோா் தலைமையில்
நில பத்திரத்தை முறையாக பூரணம் அவா்கள் தங்கள் உறவினா்கள் முன்னிலையில் ஒப்படைத்தாா்.
இவாின் இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அறிந்த மதுரைபாராளுமன்ற உறுப்பினா் சு.வெங்கடேசன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தாா்.பின்னா் அப்பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.