குற்றாலம் அருவிகள் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் 7 நாள்களுக்கு பின் தடை நீக்கப்பட்டு குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக குற்றால அருவிகளில் கடந்த 17ம் தேதி முதல் அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதித்த நிலையில் தற்போது தடையானது நீக்கப்பட்டு
ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பல பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து வருகின்றனர்.
பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதால் இன்று மாலை 4.30 மணிக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.