எகிப்தில் இருந்து முதல்கட்டமாக 20 லாரிகளில் காசாவுக்கு நிவாரணப் பொருட்கள் வந்துள்ளன.
இதுகுறித்து ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பின் தகவல் பிரிவு இயக்குநர் ஜூலியட் கூறியதாவது:
எகிப்தில் இருந்து முதல்கட்டமாக 20 லாரிகளில் காசாவுக்கு நிவாரணப் பொருட்கள் வந்துள்ளன. இதில் 4 லாரிகளில் மருந்துப் பொருட்களும், இதர லாரிகளில் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவையும் கொண்டு வரப்பட்டு உள்ளன.
மொத்தம் உள்ள 23 லட்சம் காசா மக்களுக்கு இந்த நிவாரண உதவிகள் போதாது. தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் கிடைத்தால் மட்டுமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும். இவ்வாறு ஜூலியட் தெரிவித்தார்.