ஏழு மாநிலங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற அலர்ட்!

இந்தியாவில் இன்று உத்தரகாண்ட், அசாம் மேகாலயா, ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் இமாச்சலப் பிரதேஷ், பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்திர பிரதேஷ், பீகார், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் திரிபுரா, உள்ளிட்ட மாநிலங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் டெல்லி, கிழக்கு ராஜஸ்தான், சட்டிஸ்கர், ஜம்மு, காஷ்மீர் லடாக், ஜார்கண்ட், கோவா, மகாராஷ்டிரா, கேரளா, கடலோர கர்நாடகாவில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News