தங்கலான் ஆரத்தியாக முதலில் நடிக்க இருந்தது இவரா?

பா.ரஞ்சித் இயக்கத்தில், கடந்த ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆன திரைப்படம் தங்கலான். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும், படத்தில் நடித்திருந்த நடிகர்களின் நடிப்பு, பலராலும் பாராட்டப்பட்டது.

குறிப்பாக, ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனனின் நடிப்பு, பலரையும் வியக்க வைத்திருந்தது. இந்நிலையில், ஆரத்தி கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்தவர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, இந்த கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்தது நடிகை ராஷ்மிகா தானாம். கால்ஷீட் பிரச்சனையால், அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். அதன்பிறகு தான், மாளவிகா அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

RELATED ARTICLES

Recent News