அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் வருகிற 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு ஜனவரி 22ம் தேதி அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற 22 ம் தேதி முழு அரசு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண, காணொளி வாயிலாக புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் ஏற்பாடு செய்ய இந்து அறநிலையத்துறைக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.