சம்பளத்தை உயர்த்திய ராம் சரண் : எத்தனை கோடி தெரியுமா?

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சிறுத்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு மகதீரா, நாயக், த்ருவா, புரூஸ்லீ, கைதி நம்பர் 150 என்று பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ரூ.45 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் தற்போது தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி உள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ராம் சரணின் 15ஆவது படமான ஆர்சி15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ராம் சரணுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News