பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்ஷிதா. தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவரை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை ரக்ஷிதா, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல சீரியல் இயக்குநர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் இருவரும், திருமணம் செய்யப் போவதாகவும், தகவல் கசிந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.