விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் குஷி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் புரமோஷன் செய்வதற்கு, நடிகர் விஜய் தேவரகொண்ட, சென்னைக்கு வந்திருந்தார்.
அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் 6 தோல்வி படங்கள் கொடுத்த பிறகும், ஜெயிலர் என்ற பெரிய வெற்றியை கொடுத்துள்ளார் என்று பேசியிருந்தார்.
இந்த பேச்சு தான், ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கபாலி, காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களை தோல்வி படங்கள் என்று அவர் குறிப்பிட்டிருப்பது, ரஜினி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவர்களின் கூற்றுப்படி, கபாலி, காலா, பேட்ட ஆகிய படங்கள், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி படங்கள் என்றும், தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள், வசூல் ரீதியாக வெற்றி படங்கள் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.