ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில், குறிப்பிட்ட தொகையை ரஜினிக்கு, கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி, ரஜினிக்கு சொகுசு கார் ஒன்றையும் கலாநிதிமாறன் பரிசாக வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படம், இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.