தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News