“நான் வெறும் வெள்ளை சட்டை தான் போடுறேன்.. ஆனா நம்ம பிரதமர்…,” – ராகுல் விளாசல்

மத்திய பிரதேச மாநிலம் சாட்னா பகுதியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பேசிய அவர், “நான் மோடியின் பேச்சை கேட்டேன். அந்த பேச்சில், நான் OBC பிரிவை சேர்ந்தவன் என்று அடிக்கடி அவர் கூறி வருகிறார். இவ்வாறு பேசியே, அவர் இந்தியாவின் பிரதமர் ஆகிவிட்டார்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் மதிப்புள்ள 1-ல் இருந்து 2 கோர்ட்டுக்களை அவர் அணிகிறார்.

ஏற்கனவே அவர் அணிந்த ஆடைகளை மீண்டும் அணிந்திருப்பதை, நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா?. ஆனால், நான் வெறும் இந்த வெள்ளை சட்டையை தான் அணிகிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து, தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கிய ராகுல் காந்தி, “சாதிவாரிக் கணக்கெடுப்பை பற்றி நான் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் சாதியே இல்லை என்று, பிரதமர் மோடி கூறி வருகிறார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.” என்று விளாசினார்.

RELATED ARTICLES

Recent News