கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இதை, புதுமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கியிருக்கிறார். இதில், கீர்த்தியுடன் இணைந்து திவ்ய தர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
Also Read : வெற்றிமாறன் சொன்ன தகவல்! சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி!
படத்திற்கு வரவேற்பு இருந்தபோதிலும் தங்கலான், டிமான்ட்டி காலனி 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்களால் இரண்டாவது நாளில் ரகு தாத்தா படத்திற்கு கூட்டம் குறைய தொடங்கியது.
முதல் நாளில் 25 லட்சம் வசூல் செய்திருந்தது. நேற்றைய தினம் 10 லட்சம் மட்டுமே ரகு தாத்தா படத்திற்கு வசூலாகி உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.