பாலிவுட் சினிமாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் கில்.
லக்ஷியா, தன்யா மணிக்டலா, ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடிப்பில், நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ஓடும் ரயிலில் புகும் கொள்ளைக்காரர்களை, ஒரு ராணுவ வீரன் எப்படி சமாளித்து, மக்களை காக்கிறான் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
மிகுந்த வன்முறையுடனும், ஆக்ஷனுடனும் எடுக்கப்பட்டிருந்த இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மொழிகளிலும், நடிகர் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.