தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் 26ம் தேதி வெளியானது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராயன் படம் வெளிவந்து 7 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழக பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே ரூ. 52 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகளவில் ரூ. 102 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.