மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை ராஜம்பாடி கல்வி நகரில் துரைசாமி என்பவர் இன்று தனது வீட்டின் பின்புறம் தடுப்பு சுவர் எழுப்புவதற்காக வீட்டின் பின்புறம் உள்ள இடத்தை சுத்தம் செய்துள்ளார்.
அப்போது ஒரு தகரத்தின் அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர். உடனே திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த பாபு தகரத்தின் அடியில் பதுங்கி இருந்த 7 அடி நீள மலைப்பாம்புபை பத்திரமாக மீட்டு வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி அருகில் உள்ள நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதியில் விடுவித்தார்.
வீட்டிற்குள் பதுங்கி இருந்த 7 அடி நீள மலைப் பாம்பை கண்ட அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்தனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.