புதுவை சட்டப்பேரவையில் நடிகர் விஜயகாந்த்-க்கு இரங்கல்!

புதுவை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி 15 வது சட்டப்பேரவையின் 4-வது கூட்டத்தொடரின் மூன்றாவது பகுதி இன்று காலை 9.45 மணிக்கு கூடியது.

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபையை தொடங்கி வைத்தார்.

துவக்கத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அதையடுத்து காங்கிரஸைச் சேர்ந்த வைத்தியநாதன், திமுகவைச் சேர்ந்த நாஜிம், சுயேட்சை எம்எல்ஏ நேரு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேசினர். சிலை அமைக்க கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து மறைந்த எம்எஸ் சுவாமிநாதன், பங்காரு அடிகளார், சங்கரய்யா, பாத்திமா பீவி, நடிகர் விஜயகாந்த் ஆகியோரின் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES

Recent News