புதுச்சேரியில் மளிகை கடையில் கள்ளச்சாராயம் விற்பனை!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 220 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையிலும் சேர்க்கப்பட்டனர்.

இதில், இதுவரை 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மளிகை கடை மற்றும் வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் சம்பத் போலீசாருடன் சென்று சோதனை செய்ததில், நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

RELATED ARTICLES

Recent News