மதுபோதையில் இளைஞர் ஒருவர் அரை நிர்வாணமாக அரசு பேருந்தை வழிமறித்தது பொதுமக்களிடை முகம் சுளிக்க வைத்தது.
கிருஷ்ணகிரி நகரில் பிரதான பகுதியான ரவுண்டானா பகுதியில் நேற்று நள்ளிரவு மது குடித்து போதை தலைக்கேறிய நிலையில் இளைஞர் ஒருவர் தன்னை அரை நிர்வாணமாக்கிக் கொண்டு சாலையில் வந்த அரசு பேருந்தை செல்ல விடாமல் வழி மறித்து அட்டகாசம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
இதனைக் கண்ட பொதுமக்கள் முகம் சுளித்து, இது போன்ற அருவருக்கத்தக்க சம்பவங்களை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருதுகின்றனர்.