சென்னையில் மீண்டும் உயரும் சொத்து வரி!

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி 2022 – 23ம் நிதியாண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும் 601 – 1,200 சதுரடி வரை என்றால் 50 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.

மேலும், 1,201 – 1,800 சதுரடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும் 1,800 சதுரடிக்கு மேலாக இருந்தால், 100 சதவீதமும் சொத்து வரி உயர்ந்தது. அதேபோல, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும் தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 75 சதவீத உயர்த்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில், வணிக பயன்பாட்டுக்கு, 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு, 100 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

சொத்து வரி உயர்வுக்காக வெளியிடப்பட்ட அரசாணையில் 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என, தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது.

இந்நிலையில் 2025- 26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்கிறது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டது.

சென்னையை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருந்தது.

முன்னதாக சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

RELATED ARTICLES

Recent News