சொத்துக்காக மாதவரத்தில் தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
மாதவரம் அம்பேத்கர் நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் குமார் 30 வயதான இவருக்கும் இவரது அண்ணன் நரேஷ் குமார் ஆகிய இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் நரேஷ் குமார் தம்பி விக்னேஷ் குமாரை இரும்பு ராடால் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் தலை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தம்பி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மருத்துவமனை கொடுத்த தகவலின் அடிப்படையில் நரேஷ் குமாரை மாதவரம் போலீசார் கைது செய்துள்ளனர்.