சென்னை கொடுங்கையூரில் திருமண விழாவில் தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டர்கள் தான் எங்களுடைய கட்சியின் ஆணிவேர் என்று கூறினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்சித்தொண்டர்கள், நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.
மழைக்காலங்களில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது எனக் கூறிய அவர், மழைநீர் தேங்குவதாக ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விரைவில் சரிசெய்து தருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரேம லதா, எம்.ஜி.ஆர்-க்கு பிறகு கேப்டன் தான் அனைவருக்கும் பிடித்த தலைவர் எனத் தெரிவித்தார்.