இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன்1-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12 -ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் தற்போது USA-வில் துவங்கியுள்ளது. இதுவரை USA ப்ரீ புக்கிங்கில் ரூ. 3.60 லட்சத்திற்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது என தகவல் கூறுகின்றனர்.