பாகுபலி திரைப்படத்தின் வசூல் தான் தமிழகத்தின் மிகப்பெரிய வசூல் சாதனையாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த சாதனையை, பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த 30-ஆம் தேதி அன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், முதல் நாளில் இருந்தே, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
இனிவரும் நாட்களில், 180 கோடி ரூபாய் வரை வசூல் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்முலம் பாகுபலியின் தமிழக வசூல் ரூ. 153 கோடியை அசால்டாக அடித்து நொறுக்கியுள்ளது பொன்னியின் செல்வன். அதுமட்டுமின்றி விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.