விஜய் மக்கள் இயக்கம், அன்மைக்காலமாக அரசியல் நிகழ்வுகளில் தீவிரம் காட்டி வந்தது. கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக விஜய் அறிவித்தார். அன்றைய தினமே டெல்லியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
விஜய் கட்சி ஆரம்பித்ததும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தொடர்ந்து கட்சிப் பணிகளில் அவரது ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு கிளைகளை திறந்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பல்வேறு கிராமங்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது.
போலீசார் அனுமதியின்றி கட்சிக்கொடியை ஏற்றியதாக தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி உட்பட 20 பேர் மீது எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.