காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதியப்பட்டது.
கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை இன்று போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகர் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.