சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மது அருந்தி வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்த போலீசாரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று மட்டும் 100க்குமேற்பட்டவர்கள் மது போதையில் போலீசாரிடம் மாட்டி அபராதம் கட்டியுள்ளனர். இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் புதுவண்ணாரப்பேட்டை அருகே சென்றுள்ளனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/12/alcohol.jpg)
அப்போது அவர்களை மடக்கிய போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது மது அருந்தி இருந்ததால் அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் நாங்கள் சரக்கு அடித்ததே 150 ரூபாய்க்கு தான் ஆனால் அபராதமோ 20000 என்றால் எங்களால் எப்படி பணத்தை செலுத்த முடியும்? என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் ரகளையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி குடிபோதையில் இருந்ததால் எழுதி வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பினர்.