வேலைக்கு சென்ற தாய்.. வீட்டிற்கு திரும்பி வந்ததும் கதறிய மகள்.. தந்தையே செய்த கொடூரம்..

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் 30 வயதான பெண். திருமணமான இவருக்கு, 8 வயதில் மகள் ஒருவர் உள்ளார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், டெல்லி கணேஷ் ( 40 ) என்ற நபரை, இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, அந்த பெண், தனது மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு, வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்து சிறுமியிடம், டெல்லி கணேஷ் அத்துமீறி நடந்துக் கொண்டுள்ளார்.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்யவும் முயற்சி செய்துள்ளார். பின்னர், வேலைக்கு சென்ற பின், மீண்டும் வீடு திரும்பியபோது, அவரது மகள் கதறி அழுதுக் கொண்டு இருந்துள்ளார்.

தாய் சிறுமியிடம் விசாரித்ததில், டெல்லி கணேஷ் செய்த அட்டூழியங்களை விவரித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், டெல்லி கணேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மகளுக்கு தந்தையே பாலியல் கொடுமை அளித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News