கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 29-ம் தேதி பயங்கர நிலச்சரி ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டகை, சூரல்மலை பகுதியில் இருந்த வீடுகள், கட்டடங்களின் பெரும்பகுதி மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன 153 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி கேரளா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் கண்ணூர் வந்த பிரதமர் மோடியை கேரள ஆளுநர், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். கண்ணூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வயநாட்டிற்கு சென்றார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.