இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா..பிரதமர் அவசர ஆலோசனை..!

2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டது. கொரோனா பரவல் குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.

சீனாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா, இப்போது, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் கொரியா என சில நாடுகளிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் அச்சத்தால் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகதாரத்துறை செயலர் ராஜஸே் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கோவிட் பிஎஃப்7 வகை என கண்டறியப்பட்டுள்ளது. எந்த வகை வைரஸ் பரவுகிறது என்பதை துல்லியமாக கண்டறிவதற்காக தற்போது எடுக்கப்படும் பாசிட்டிவ் மாதிரிகளை மேம்படுத்தப்பட்ட பரிசோதனைக்கு அனுப்பிவைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். முக கவசம் அணிவதன் அவசியம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சாத்தியக் கூறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை குஜராத்தை சேர்ந்தவர்கள் 3 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவில் பிஎஃப்7 ஒமிக்கரான் தொற்று நான்கு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News