இந்திய நாட்டின் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமானவர் நரேந்திர மோடி. இவரது தாயார் ஹீரோபென், உடல்நலக்குறைவு காரணமாக, அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, மோடியை விமர்சித்து, ட்விட்டரில் பல்வேறு பதிவுகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.
அதாவது, நேற்று தாயின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு மருத்துவமனைக்கு வந்த மோடி, தன்னுடன் படக்குழுவினரையும் அழைத்து வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனையில் இருக்கும் தாயை பார்க்கும்போதும், படக்குழுவினருடன் வந்துள்ளாரே என்று டிவிட்டரில் விமர்சனம் எழுந்துள்ளது.
இதேபோன்று, மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, மருத்துவமனையில் பார்வையிடும்போதும், படக்குழுவினருடன் மோடி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.