தாயின் செயலால் மனமுடைந்த பிளஸ்1 மாணவி – தீக்குளித்து தற்கொலை..!

தஞ்சாவூர் மாவட்டம் மானம்புச்சாவடி இடையர் தெருவை சேர்ந்த தம்பதி கதிரேசன், செல்வகுமாரி. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 3 வது மகளான காவ்யப்பிரியா 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தாய் செல்வகுமாரி கடந்த ஆண்டு தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பெண்ணிடம் கடன் கொடுத்துள்ளார். அதனை அவர் திருப்பித் தராததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நீங்கள் சண்டையிடுவது எனக்கு அவமானமாக உள்ளது என காவ்யபிரிய பலமுறை தாயிடம் கூறியுள்ளார். ஆனாலும் தினந்தோறும் தகராறு தொடர்ந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் காவ்யபிரியா.

இந்நிலையில் இன்று காலை காவ்யபிரியா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News