அரசியலில் ஆர்வம் உள்ளது என்று அவ்வப்போது கூறி வரும் நடிகர் விஜய், கட்சியின் பெயரை நேற்று அதிரடியாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதரவாக சிலரும், எதிராக சிலரும் பதிவுகளை வெளியிட்டனர். இந்நிலையில், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து, இயக்குநர் பேரரசு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசியல் வருகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆனால், விஜய் சினிமாவில் இருந்து விலகுவது குறித்து பேசிய பேரரசு, அப்படி செய்யாதீர்கள் என்றும், தொடர்ந்து சினிமாவில் நடியுங்கள் என்றும் அறிவுரை கூறினார்.
முதலமைச்சராக பதவி ஏறும் கடைசி தருணம் வரை, எம்.ஜி.ஆர் சினிமாவில் பயணித்தார் என்றும் பேரரசு கூறியுள்ளார்.