பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமானோர் அரசு , ஆம்னி பேருந்துகள் மற்றும் தங்களின் சொந்த வாகனங்களில் பண்டிக்கையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்றனர்.
புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர்.
நேற்றுடன் விடுமுறை முடிந்ததால் நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் வீடு திரும்பினர் இதனால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரத்தில் இரவு முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்,
தொடர்ந்து ஆம்னி பேருந்துகளில் ஊர் திரும்பிய பயணிகள் வண்டலூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தில் இறக்கிவிடபட்டதால் மாநகர பேருந்து நிலையத்திற்கு வெகு தூரம் நடந்து வந்து அவதியடைந்தனர்.
மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் சென்னைக்கு செல்பவர்கள் போதிய பேருந்து கிடைக்காத்தால் அவதியடைந்தனர் இதனை பயண்படுத்தி கொண்ட ஆட்டோ ஓட்டுனர் கூடுதல் தொகை கேட்பதாக புகார் எழுந்துள்ளது.