தளபதி விஜய் நடிப்பில், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு. இறுதிகட்ட புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் இப்படத்தின், இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
பல்வேறு திரை பிரபலங்கள், ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், ஏராளமான இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் வாரிசு தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நேரு உள் விளையாட்டு அரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.