வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படமும், இரவின் நிழல் திரைப்படமும், விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்று இருந்தது.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பார்த்திபன் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தனது படத்தின் பெயரை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
52-ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெயரே வித்தியாசமாக இருப்பதால், படமும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.