உலகின் மிப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) தொடங்குகிறது. இது 33-ஆவது ஒலிம்பிக் போட்டி ஆகும். இந்த போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
இந்தாண்டில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து 117 பேர் கொண்ட வலுவான அணி களமிறங்குகிறது.
இன்று (ஜூலை 26) தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த முறை இந்தியர்கள் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களம் காண்கிறார்கள்.
இந்திய நேரப்படி, நள்ளிரவு 11 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.