பள்ளி சிறுவர்களோடு ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி மேடையில் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் அறக்கட்டளை மற்றும் அயப்பாக்கம் ஊராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 /100 மதிப்பெண் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 -12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 250 மாணவர்களுக்கு 5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டது.
இதனை மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி வழங்கினார். முன்னதாக அரசுப் பள்ளி மாணவர்களின் தனித் திறன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதே போன்று பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம், குழு நடனம், தனிநபர் நடனம், மிருதங்கம் வாசித்தல், போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழா முடிவில் பாடல்கள் இசைக்கபட்டது. இதில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அங்காங்கே நடனம் அடினர். அதில் பள்ளி சிறுவர்களோடு ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி மேடையில் நடனமாடி மகிழ்ந்தார்.