சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய குறும்பத்தெரு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், அப்பகுதியை சேர்ந்தவருடன் வெப்பாலம்பட்டியில் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தொடர்ந்து சூதாட்டம் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைந்துள்ளது.

இதையடுத்து கிடைத்த தகவலில் பெயரில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விவசாய நிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உட்பட 10 பேரை சுற்றி வளைத்து கைது செய்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், விசாரணையில் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவரே சூதாடத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News