பம்மல் பிபி ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள்

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில் பிபி ஜெயின் மருத்துவமனை உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு புதுச்சேரி இளைஞர் ஒருவர் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக வந்துள்ளார். அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இது குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பி.பி.ஜெயின் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று உறுதியானது. இதையடுத்து பி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை. அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News