அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில், ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளு ஸ்டார். இப்படம், வரும் 25-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட, அப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், ராமர் கோவில் திறப்பு குறித்து பேசியிருந்தார்.
மேலும், இந்த நாள் மிகவும் முக்கியமான நாள் என்றும், இன்று வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், நம் அனைவரும் தீவிரவாதிகள் ஆக்கப்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்னும் 10 ஆண்டுகளில், இந்தியா எவ்வளவு மோசமான இடத்திற்கு செல்லும் என்பதை நினைத்துப் பார்த்தால், பயமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
500 ஆண்டு கால பிரச்சனை முடிவுக்கு வந்ததாக ரஜினி கூறிய வார்த்தையை எடுத்து வைத்து பேசிய பா.ரஞ்சித், அது சரி, தவறு என்பதைத் தாண்டி, அதில் எனக்கு விமர்சனம் உள்ளது என்றும் கூறினார்.