நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரமுடன் இணைய இருக்கிறார். KGF-ஐ மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ள இந்த படம், 3டி-யில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, கோல்டு என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்க உள்ளார்களாம். இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள், டைட்டில் அருமையாக உள்ளது என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.