பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், தங்கலான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனானால், பா.ரஞ்சித் செம டென்ஷனில் இருக்கிறாராம். அதாவது, முக்கிய கதாபாரத்திற்காக தான், மாளவிகா தேர்வு செய்யப்பட்டாராம்.
ஆனால், அவரது நடிப்பு, பா.ரஞ்சித்திற்கு திருப்தியாக இல்லையாம். நிறைய டேக்குகள் வாங்குகிறாராம். நடிகைகள், நடிகர்களை தேர்வு செய்வதில் வல்லவராக இருக்கும் பா.ரஞ்சித்திற்கே இந்த நிலையா? என்று விவரம் அறிந்தவர்கள் பேசி வருகின்றனர்.