தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.