ஆப்டிகல் இல்யூஷன் என்று கூறப்படும் கண்களை மயக்கும் வகையிலான புகைப்படங்கள், நெட்டிசன்களை கவருவது வழக்கம் தான். இந்த புகைப்படங்கள், தங்களுடைய அறிவை சோதிப்பது போல் இருப்பதால், பல்வேறு இணையவாசிகள், இதுதொடர்பான பதிவுகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுமாதிரியான புகைப்படம் ஒன்று வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், பச்சை பசேளென காட்டுப்பகுதி ஒன்று அழகாக காட்டப்பட்டுள்ளது. இதில், தவளை ஒன்று கிடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனை 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பலரும் அந்த புகைப்படத்தில் இருந்த தவளையை கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர்.
நீங்களும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம்.. அடுத்த முறை இதேபோன்ற வேறொரு பதிவை பார்க்கும்போது, மூளையை கூர்மையாக பயன்படுத்தி, அதனை கண்டுபிடியுங்கள்.. அல்லது நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், கூர்மையான கண் பார்வையும், அறிவும் கொண்டவர்கள் என்று பெருமையுடன் இருங்கள்..