கிருஷ்ணகிரியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
அதிமுக ஒற்றுமையுடன் இருந்தால் தான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும். திமுக ஆட்சியில் எது கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது.
எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன். கேபி முனுசாமியின் கருத்துகளுக்கு எதிர் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.