இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவரது 147-வது பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு மறியாதை செலுத்திய பிரதமர் மோடி, பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது என்னுடைய உடல் மட்டும் தான் இங்கிருக்கிறது, என் மனம் முழுவதும் மோர்பியா பால விபத்தில் இறந்த குடும்பத்துடன் தான் இருப்பதாக பேசினார். மேலும் இதயத்தில் வலி நிறைந்திருந்தாலும், மற்றொரு பக்கம், கடமைக்கான பாதை என்னை அழைப்பதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.